வெளிநாடுகளில் இருந்து இன்று 414 பேர் நாடுதிரும்பினர்

இன்று காலை 414 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (29) காலை மாலைதீவில் இருந்து UL 104 விமானம் ஊடாக 69 பயணிகளும், தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 45 பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமான ஊடாக 04 பயணிகளும், இந்தியாவில் இருந்து 6E 9034 விமான ஊடாக 04 பயணிகளும் மற்றும் துபாயிலிருந்து UL 226 விமான மூலம் 292 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435