ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) சம்சங் கலக்ஸி நோட் 7 ஸ்மார் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு அதன் முழுப் பெறுமதியான பணத்தை அல்லது புதிய சம்சங் எஸ் 7 மற்றும் மிகுதிப் பணத்தையும் மீள வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய கிழக்கு சம்சங் நிறுவனம் அதன் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்விணையதளத்தில் எவ்வாறு கலக்ஸி நோட் 7 ஐ வழங்கி பணம் அல்லது பொருளை பெற்றுக்கொள்வது என்ற விபரங்கள் இன்னமும் வெளியிடப்படாவிடினும் நோட் 7 ஐ விலை கொடுத்து வாங்கியவர்கள் நட்டப்படாதிருப்பதற்கான மாற்று வழியை நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோட் 7 ஐ பரிமாற்றம் செய்வதற்கான இடம், முறை மற்றும் மீள்செலுத்தல் தொடர்பான விடயங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவ்விணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பணமாக அல்லது வேறு சம்சங் பொருட்களை அப்பணப் பெறுமதிக்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.
நோட் 7 பற்றிகளில் தீப்பற்றுவதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இம்மாதம் ஆரம்பத்தில் சந்தையிலிருந்த 2.5 மில்லியன் நோட் செவன் ஸ்மார் போன்களை சம்சங் நிறுவனம் மீள பெற்றுக்கொண்டது. அத்துடன் அதன் தயாரிப்பையும் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. குறித்த அறிவிப்பு வந்ததையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் கலக்ஸி நோட் 7 விற்பனை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ கல்ப் நியுஸ்