​லெபனான் வெடிப்புச் சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4ம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் உறுதி செய்துள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களின் நிலைமை கவலைக்கிடமான வகையில் இல்லையென்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வெடிப்புச் சம்பவத்தில் இலங்கை தூதரகம் மற்றும் அதிகாரிகளின் இருப்பிடங்கள் சிறிதளவு சேதமடைந்துள்ளபோதிலும் தூதரகம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை பொது மக்களுக்காக திறக்கபட்டுள்ளது என லெபனானுக்கான இலங்கை தூதுவர் திருமதி டி.பி.சி.டப்ளியு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தினமும் அதிக எண்ணிக்கையானவர்கள் உதவிகளுக்கான துதரகத்திற்கு வருகைத் தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெய்ருட்டின் துறைமுகப்பகுதியில் களுஞ்சியச்சாலையில் 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த 2,750 அமோனியம் நைட்ரேட்டில் ஏற்பட்ட வெடிப்பு இச்சேதத்திற்கு காரணமாகியுள்ளது.

இவ்வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஐந்தாயிரம் பேர் காயமடைந்துள்ளதுடன் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பெய்ரூட்டில் 3 நாட்கள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டு உச்ச பாதுகாப்பு கவுன்சில் பெய்ருட் நகரத்தை பேரழிவு நகரமாக அறிவித்துள்ளது. அங்கு கடந்த 4ம் திகதி தொடக்கம் இரு வார கால அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே லெபனானில் எதிர்வரும் 10ம் திகதி வரை முடக்க நிலை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435