அடுத்த ஆண்டாவது ஓய்வூதியம் கிடைக்குமா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் யோசனையாக முன்வைக்கப்பட்டது.

எனினும், இந்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுக்கும் திட்டம் இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த திட்டத்தை அடுத்த வருடம் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நிறுவனங்கள் இணைந்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக வெளிவிவகார அமைச்சு, திறைசேரி, ஓய்வூதிய திணைக்களம், மத்திய வங்கி என்பன இணைந்தே இந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஓய்வூதிய திணைக்களம் இருந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாகவே ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

2016 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதிதான் அனுமதி கிடைத்ததாக அமைச்சர் தலதா அதுகோல கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அனுமதி கிடைக்கப்பெற்றன் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் சுமையை ஏற்படுத்தாமல், குவைத் மானியத்தின் ஊடாக இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435