பிறக்கும் புதுவருடத்தை கொண்டாட்டம் நிமித்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி பொது வாகன நிறுத்தங்களில் வாகனம் நிறுத்துவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாது என்று அபுதாபி மாநகரசபை அறிவித்துள்ளது என்று ஜி.டி.என் ஒன்லைன் இணையளதம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி ஆரம்பத்துடன் (நள்ளிரவு 12.00 மணி) தொடக்கம் 2ஆம் திகதி காலை 8.00 மணிவரை பொது வாகன நிறுத்தங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்த முடியும்.
மாநாகரசபை அலுவல் மற்றும போக்குவரத்து திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள பொதுவாகன நிறுத்தங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்தலாம்.
எனினும் அனைத்து வாகனங்களையும் சரியான முறையில் நிறுத்தி வைக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏனைய வாகனங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு வாகனங்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும் அதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைச்சு திணைக்களத்திடம் கோரியுள்ளது.
காலதாமதமாக வருவதனால் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதான நேரங்காலத்தோடு அவசியமான இடங்களுக்கு சென்று வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துமாறு திணைக்களம் சாரதிகளிடம் கோரியுள்ளது.