
எந்த காரணத்தினாலும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மூடப்படாது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் பிரியங்கர பெரேரா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண வௌிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பணியகத்தை மூடுவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக சமுக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கொவிட் 19 காரணமாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முகவர் நிலைய உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வௌிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் 34 முன்மொழிவுகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். அத்துடன் நிதிப்பிரச்சினைக்குள்ளாகியுள்ள உரிமையாளர்களுக்கு 4 வீத வட்டியுடன் அரச கடன் வழங்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குடும்ப பின்னணி அறிக்கை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கமைய தயாரிக்கின்றனர். எதிர்காலத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஒரே மாதிரியாக அமையும் வகையில் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். எது தொழில் பெறுவோர் மற்றும் தொழில் முகவர் நிலையங்களுக்கும் இலகுவானதாக அமையும்.
வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடும் போது பல்வேறு மோசமான செயல்களை மற்றும் சுற்றுலா வீசாவினூடாக ஊழியர்களை வௌிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையையும் வெகு விரைவில் நிறுத்துவோம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
நன்றி – தினகரன்