ஐக்கிய அரபு இராச்சியத்தின் குவாய்பட் சர்வதேச அதிவேக வீதியில் புதிய வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீதியில் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வழங்கப்பட்டுள்ள அனுமதியை விட வேகம் அதிகரித்தால் ரேடார் கருவிகளினூடாக அவதானிக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இப்புதிய வேக கட்டுப்பாடானது கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த வருடம் இவ்வீதியில் வேகக்கட்டுப்பாடு மணிக்கு 140 கிலோமீற்றர் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.