விசா மற்றும் வதிவிட அனுமதி அட்டை காலாவதியானவர்களுக்கு மேலும் மூன்று மாத காலம் வழங்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.
இம்மூன்று மாத காலத்தில் தமது இருப்பை சட்டரீதியாக்கவும் அல்லது நாட்டை விட்டு வௌியேறவும் பயன்படுத்த முடியும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விசா விதிமுறைகளை மீறியவ, மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்களை காலாவதியானவர்களுக்கு குறுகிய கால பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இப்பொது மன்னிப்புக் காலம் மே மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (ஓகஸ்ட் 19) நிறைவடையவிருந்தது. தற்போது நவம்பர் மாதம் 17ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அடையாள அட்டை மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஹீட் ரகான் அல் ரஷிடி தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள், எழுத்து மூல உறுதிப்பாடுகள் இல்லாத பலருக்கு தாம் வௌியேறுவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளதாக சமூக சேவகர் எஸ் வி. ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் ஒரு மாத கால பொது மன்னிப்புக் காலத்தை வழங்கியது. தற்போது மூன்று மாதமாக நீடிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் பயந்து ஒழிந்திருந்தவர்களுக்க இது மிகச் சிறந்த வாய்ப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.