ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி விமான நிலையத்தில் நேற்றைய தினம் (26) ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யேமனின் அவுத்தி போராளிகள் குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுத்தி போராளிகள்; குழுவினால் இயக்கப்படும் அல் மஸிரா தொலைக்காட்சி சேவையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், அவ்வாறான தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுவதை அபுதாபி விமான நிலையம் மறுத்துள்ளது.
விமான நிலையத்தின் வாகனமொன்று எதிர்கொண்ட விபத்து காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக விமான நிலையம் டுவிட்டர் தளத்தின் ஊடாக தகவல் வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தின் முனையம் 1 பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்தலச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த சம்பவத்தின் காரணமாக விமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அபுதாபி விமான நிலையம் குறித்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.