அறுபது வயது கடந்தால் கட்டாரில் வேலையில்லையாம்

கட்டாரின் புதிய சட்டப்படி 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பதிவு அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டில் பணியாற்றும் 60 மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் பதிவு அனுமதிப்பத்திரங்களை விரைவில் ரத்து செய்வது என்ற தீர்மானத்தை அந்நாட்டு நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு ( MADLSA) மேற்கொண்டுள்ளதாக கட்டார் ட்ரிபியுன் (Qatar Tribune) செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டார் தேசிய ​நோக்கினூடாக எதிர்வரும் 2030ஆம் ஆம் ஆண்டளவில் கூடிய பயன்தரக்கூடிய அபிவிருத்தி திட்டத்திற்கு வழிகோறுவதுடன் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்துவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

தேசிய மற்றும் தொழில் நிபுணத்துவம் மற்றும் தொழில் ஆகியவற்றுக்கான விசேடத் தன்மையை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதுடன் அந்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் 60 வயதை எட்டும் போது தொழில் ஒப்பந்தம் நிறைவடையும் வகையில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வயதெல்லை கடந்த பின்னர் தொழில் வாய்ப்பை நாடும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பை இழப்பர் என்றும் சில வேலைவாய்ப்புக்களுக்கு தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதில் வயதெல்லை தடையாக இருப்பின் உள்நாட்டவர்கள் குறித்த பதவிகளில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு கூறியுள்ளது.

அதுமட்டுமன்றி கட்டாரில் தொழில்வாய்ப்பை நாடுவோருக்கு உரிய பயிற்சி மற்றும் வழிகாட்டல்கள் அவசியமாயிருப்பின் நிறுவனங்கள் உரிய பயிற்சிகளை வழங்கி நிபுணத்துவம் மிக்க தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435