குவைத்தில் வணிக அடிப்படையிலான (Commercial Flights) விமான சேவை மீண்டும் தொடங்கி, விமான நிலையம் திறக்கப்பட்டவுடன், குவைத்திற்கு வரும் வெளிநாட்டினர் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவார்கள் எனவும், அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
குவைத் சுகாதார ஒழுங்குமுறை உயர் நிலை நிரந்தரக் குழு , சுகாதாரம் , உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குவைத்திற்கு வரும் வெளிநாட்டவர் பணம் கொடுக்க மறுத்தால் , தனிமைப்படுத்தல் கட்டணத்தை அழைப்பவர் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் நிறுவனத்திடம் வசூலிக்கப்படும் என்றும்,
மேலும் , வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டில் PCR பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் அவர்கள் கொரோனா வைரஸ் இல்லை என்பதற்கான ஒரு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – குவைத் சோசியல் மீடியா