
சவுதி அரேபியாவில் அலைபேசி இணைப்புக்களை பயன்படுத்துபவர்கள் தத்தமது ஆள் பெருவிரல் அடையாளத்தை பதிவு செய்வது அவசியம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெருவிரல் அட்டையை பதிவு செய்யாதவரகளின் அலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு, குற்றச்செயல்களை குறைத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்கு மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதியில் ஏற்கனவே அலைபேசி பாவனைத் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. மீள்நிரப்பல் அட்டைகளை வெறுமனே இலங்கையில் போன்று சுரண்டி குறித்த எண்ணுக்கு அழைத்து மீள்நிரப்ப முடியாது. அரசாங்கம் வழங்கியுள்ள இகாமா இலக்கத்தையும் மீள்நிரப்பு அட்டையில் உள்ள ரகசிய இலக்கத்துடன் பதிவு செய்தல் வேண்டும். இந்நிலையில் மேலும் கட்டுப்பாட்டை விதிக்கும் நோக்கில் தற்போது விரல் அடையாளமும் பெறப்படுகிறது.
சவுதியில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் உங்கள் அலைபேசி தொலைந்தால் உடனடியாக அவ்விணைப்பை ரத்து செய்தல் வேண்டும். வேறு யாராவது அவ்விணைப்பை பெற்று குற்றச் செயல்களில் ஈடுபடின் நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை கருத்திற்கொள்ளுங்கள்.