கடந்த 8 வருடங்காளாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தம்பதி மீது அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழங்கு தொடரப்பட்டுள்ளது.
குமுதினி கண்ணன் (48), கந்தசாமி கண்ணன் (52) என்ற இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2015 ஜூலை மாதம் வரையில் மெல்போனில் உள்ள அவர்களுடைய வீட்டில் குறித்த பெண்ணை அடிமைப் போன்று வைத்திருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் அடுத்த ஆண்டு மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த பெண்ணின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக அவருடைய சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
பணியாட்களை அடிமையாக வைத்திருந்தால் அவுஸ்திரேலிய சட்டப்படி குறைந்தது 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்