டுபாயில் பணியாற்றிய ஆசியாவைச் சேர்ந்த நபரொருவர் தாக்கியதில் நிறுவன முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நான்கு தடவைகள் முகாமையாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ஈரல், நுரையீரல் மற்றும் உடலின் உட்பகுதியில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக முகாமையாளர் உயிரிழந்துள்ளார் என்று மரணவிசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த முகாமையாளர் தன்னை பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றமையினால் இவ்வாறு தாக்கியதாகவும் அவரை கொலை செய்யும் நோக்கம் தனக்கில்லை என்றும் சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவித்ததுடன் அழுதுபுலம்பி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். கடந்த ஒரு வருட காலமாக பல தடவைகள் இவ்வாறு தான் முகாமையாளரால் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் சந்தேகநபர் தெரிவித்தார்.
எனினும் கொலை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நபருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்