ஆட்கடத்தல் வியாபார (Human trafficking) தடுப்புமுறை தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் ஆட்கடத்தல் வியாபாரத்தை (Human trafficking) தடுப்பது தொடர்பில் தேசிய செயற்பாட்டு சிறப்பு பணிக்குழு ஒன்று 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பணிக்குழுவினால் ஆட்கடத்தல் வியாபாரத்தை இல்லாது தொழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடிருந்தன. இதற்கமைவாக ஆள் கடத்தல் வியாபாரத்தையை தடுப்பதற்காக சமூக கட்டுப்பாட்டு பொலிஸ் அதிகாரிகளை கேந்திரமாகக் கொண்டு பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மற்றும்; நீதி அமைச்சு ‘LIFE’ அமைப்பு மற்றும் இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கிடையில் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.