வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளும் மற்றும் ஆலோசனைகளை பெறும் ‘ஷ்ரமிக்க சுரக்கும்’நடமாடும் சேவையொன்று இன்று (01) திருகோணமலை நகரமண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இந்நடமாடும் சேவையானது இன்று காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையும் பின்னர் 1.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை குச்சவேலி பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள மற்றும் பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் கலந்துகொள்ளும் இந்நடமாடும் சேவையில் மக்கள் நேரடியாக அமைச்சருடன் கதைத்து தமது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடமாடும் சேவையானது தொடர்ந்து பெப்ரவரி இரண்டாம் திகதி கிண்ணியா பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலும் 1.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை மூதூர் பிரதேச செயலகத்திலும் மூன்றாம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் 1.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை கந்தளாய் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.