இத்தாலியில் தற்காலிய வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்று நாளை (13) வௌியிட அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனூடாக இத்தாலியில் 17000 தற்காலிக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிகமாக வெவ்வேறு பிரிவுகளுக்கு இவ்வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இத்தாலிக்கு விஜயம் செய்து தற்காலிக வீஸா காலாவதியாகிய நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் 5750 புலம்பெயர் தொழிலாளர்கள் தமது இருப்பை சட்டபூர்வமாக மாற்றியமைக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது இருப்பை சட்டபூர்வமாக மாற்றியமைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள் விண்ணப்படிவங்களை நாளைமறுதினம் (14) தொடக்கம் ஒன்லைனில் நிரப்பி எதிர்வரும் 21ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். தற்காலிக தொழிலுக்காக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் மாதம் 28ம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக தொழில் வாய்ப்பு, தொழிற் பயிற்சி பெற்றவர்கள், கல்விமான்கள், பயிற்சிக்காக விண்ணப்பிப்பவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து துறைகளிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையான வேலைவாய்ப்புக்களே காணப்படுகின்றமையினால் முதலில் விண்ணப்பிப்போருக்கு வாய்ப்புகள் அதிகம்
இத்தாலி உள்விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறித்த விண்ணப்பங்களையும் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.