சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள இலங்கை கொன்சியுலர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரிந்த அதிகாரி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அங்கு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மீண்டும் அலுவலகம் திறக்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜெத்தா நகரில் உள்ள இலங்கை கொன்சியலர் அலுவலகத்தில் இருந்த இலங்கை வந்த நபர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.