இந்திய தச்சுத் தொழிலாளிக்கு டுபாயில் மூன்று மாத சிறை தண்டனை

டுபாயில் குழந்தை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேஷிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்திய பிரஜைக்கு மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டுபாயில் தச்சுச் தொழிலாளியாக பணியாற்றிய 48 வயதான இந்திய பிரஜையே இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளார்.

குறித்த பெண்ணுடன் ரகசிய உறவை பேணி வந்த இந்திய நபர் பணிப்பெண்ணின் எஜமான் மற்றும் எஜமானி ஆகியோர் தொழிலுக்காக சென்ற பின்னர் அவருடைய வீட்டுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் குறித்த நபர் தன்னுடன் பணியாற்றுபவருடன் உறவை பேணியமையை குழந்தை பராமரிப்பாளர் கண்டறிந்ததையடுத்தே இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பணிப்பெண்ணின் எஜமான் வௌியில் சென்றவுடன் தச்சுத் தொழிலாளி வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று அயலவர்கள் சாட்சியளித்துள்ளனர்.

எனினும் சந்தேகநபர் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435