இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று (13) நெடுந்தீவு கடல் பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் – இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 55 வயதான கருப்பையா முன்னசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என கடற்படை குறிப்பிட்டுள்ளது.
குறித்த மீனவரின் சடலத்தை யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.