படிப்படியாக இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை – ரமேஷ் பத்திரன

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளி்ல் உள்ள இலங்கையர் படிப்படியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை உப பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் இருந்து இதுவரை 4500 இலங்கையர்கள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்னும் 41,000 பேர் இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர். அவர்களை கட்டம் கட்டமாக அழைத்து வர திட்டமிட்டுள்ளோம்.

அதற்கமைய,

மே 21- இந்தோனேஷியா
மே 22 – ரஷ்யாவில் உள்ள மாணவர்கள்
மே 23 – பங்களாதேஷிலிருந்து அத்தியவசிய தொழிலாளர்கள்
மே 26 – கட்டார் புலம்பெயர் தொழிலாளர்கள்
மே 28 – பெலரஸில் கற்கும் மாணவ மாணவிகள்

அதன் பிறகு அவசியம் கருதி மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவார்கள்.

குறுகிய கால வீஸா பெற்ற 11,000 இலங்கையர்கள் பிற நாடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் அவர்களை அழைத்து வருவதற்காக இலங்கையில் இருந்து விசேட விமானங்கள் அனுப்பப்படாது. அவர்கள் இருக்கும் நாடுகளில் இருந்து வருவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்துகொண்டார்களாயின் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435