இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் சிலர் ஒருவார காலமாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்லும் வழியில் கைதுசெய்யப்பட்டுள்ள ஈழ அகதிகள் நீண்டகாலமாக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அவர்கள் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீண்டகாலமாகியும் அவர்களை 3 ஆம் நாடொன்றில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தங்களை மூன்றாம் நாடொன்றில் குடியேற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஈழ அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.