
கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் திட்டத்தின் கீழ் 120 பேர் நேற்று (12) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கட்டார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தே இவ்விலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கட்டார் விமானசேவையின் QR 668 இலக்க விமானத்தினூடாக 13 இலங்கையர்களும் ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான UL 504 இலக்க விமானத்தினூடாக 107 இலங்கையர்களும் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.