சவுதி வாழ் இலங்கையரின் பணப்பரிமாற்றத்தை இலகுபடுத்திக்கொள்வதற்கான வாய்பை தேசிய சேமிப்பு வங்கி ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.
அதற்கமைய, புதிய திட்டமொன்றை வகுத்துள்ளதாகவும் அது தொடர்பில் சவுதி வாழ் இலங்கையரை தௌிவுபடுத்தும் செயலமர்வுகளையும் நடத்தியுள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர் எஸ்.டி.என் பெரேரா தெரிவித்துள்ளார்.
கிழக்கு சவுதியில் வசிக்கும் இலங்கையர் வசதி கருதி புதிய தேசிய சேமிப்பு வங்கி சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் விரைவில் தேசிய சேமிப்பு வங்கியின் சேவை அங்கு ஆரம்பிக்கப்படும் அதற்காக வங்கியின் பிரதிநிதிகள் சவுதிக்கு செல்லவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வங்கிச் சேவையூடாக சவுதி வாழ் இலங்கையர் பணப்பரிமாற்றததை மேற்கொள்ளவும் வைப்பிலிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.