இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்று கொடுக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு வௌிவிவகார, தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
ஜப்பான் தொழில்வாய்ப்பிற்கு இலங்கையர்களை இணைத்துகொள்ளும் ஜப்பான் நிறுவனமான IM இன் இலங்கைக்கான வதிவிட பொது முகாமையாளர் எச். கவஹாராவுடனான இக்கலந்துரையாடல் தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்தார்.
நிலமை சீரானதும் பயிற்சி பெற்ற இலங்கையர்கள் உடனடியாக ஜப்பான் அனுப்புவது மற்றும் எதிர்காலத்தில் அதிக தொழில்வாய்ப்புக்களை வழங்குவது போன்ற விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப பணிகளுக்காக இதுவரை இலங்கையில் இருந்து நூறு பேர் வரை ஜப்பான் அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் ஜப்பானில் மிக சிறப்பாக பணியாற்றுகின்றனர் என IM நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பொதுமுகாமையாளர் எச். கவஹரா தெரிவித்துள்ளார்.