சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்கும் முயற்சியிலுள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும்

சட்ட விரோத ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் நாடுகள் வரிசையில் முன்னணிக்கு வரும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரச திணைக்களம் பாராட்டியுள்ளதாகவும் சர்வதேச நிதியுதவிகளை பெறுவதற்கு இக்கௌரவம் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மனித வியாபாரம் தொடர்பிலான புதிய அறிக்கையில், இலங்கை இரண்டாம் நிலையில் உள்ளது. ‘ சட்டவிரோத ஆட்கடத்தல்’ என்பது ஒரு நாட்டில் எல்லைக்கு அப்பால், நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பால், சர்வதேச ரீதியாக இணைந்து செயற்படுத்தப்படும் குற்றச்செயல்களில் ஒன்றாகும். ஆட்கடத்தல் என்பது சர்வதேசம் போன்றே இலங்கையிலும் சட்டவிரோத செயற்பாடாகும். ஆட்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு குற்றவியல் சட்டத்திற்கு அமைய தண்டிக்கப்படவேண்டியவர்களாவர்.

ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு எதிராக முறையாக செயற்படுவதற்கு பணிக்குழுவொன்று அமைக்கப்பட்டது. நீதியமைச்சு, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், பொலிஸ் திணைக்களம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து இப்பணிக்குழுவை அமைத்தது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் சட்டவிரோத ஆட்கடத்தலை சுற்றிவளைப்பதற்கான விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தலத்தா அத்துகோரள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வௌிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பொறுப்பான அமைச்சரவை அமைச்சராக உள்ள ஹரீன் பெர்ணாண்டோ இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆட்கடத்தல் தொடர்பாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக புலனாய்வுத் திணைக்களத்திற்கு கையளிக்கப்படுகிறது. அதேபோல் நாடு முழுவதும் பல்வேறு செயலமர்வுகளினூடாக மக்கள் தௌிவுபடுத்தப்படுகின்றனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக அமெரிக்க அரச திணைக்களம் அறிக்கை தயாரிக்கும் போது மக்களை தௌிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்கிறது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நாடு முழுவதிலும் உள்ள அனுமதி பெற்ற வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களை தௌிவுபடுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. அதேபோல், வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் ஆட்கடத்தல் வியாபாரத்தில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் தூதரகங்களில் உள்ள அதிகாரிகளை தௌிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கும் அமெரிக்க அரச திணைக்களம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.,

சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்தை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை நிறுத்தப்படக்கூடாது. சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பு சட்டத்தில் உள்ள குறைந்தபட்ச தரநிலைகளை பூரணப்படுத்துவதில் ஈடுபட்டு நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடங்க வேண்டும். இந்நாடுகளில் முதல் வரிசையில் வரும் நாடுகளில் இடம்பிடிப்பதற்கான தகுதி இலங்கைக்கு உண்டு. அந்த இலக்கு நோக்கி நாம் செல்லவேண்டும். அதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணியுடன் நாம் நெருக்கமாக பணியாற்றுகிறோம் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435