இலங்கையர்கள் குறித்து தகவலறிய தொலைபேசி இலக்கம்!

வளைகுடா நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறுகளை நிறுத்திக் கொண்டதன் காரணமாக, அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறுவுகளை துண்டித்துள்ளதால், கட்டாரில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்த நிலையில், கட்டாரிலுள்ள இலங்கையர்களின் நிலவரம் குறித்து இலங்கைக்கான கட்டார் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது, ஸ்ரீ லங்கன் விமான சேவை உள்ளிட்ட சில விமானசேவைகள் கட்டாரிலிருந்து இலங்கைக்கு இடம்பெறுகின்றது.

இந்த நிலையில், விமான பயணங்களைப் பதிவுசெய்வதில் அதிக சிரத்தை காட்ட வேண்டும்.

ஏனெனில், கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் சேவை இடம்பெறாத காரணத்தால், விமான பயண டிக்கட்டுக்களில் பிரச்சினை காணப்படுகின்றது.

இந்த நிலையில், கட்டாரிலிருந்து இலங்கைக்கு செல்வதற்கோ அல்லது இலங்கையிருந்து கட்டார் வருவதற்கோ பயணிகள் ஸ்ரீ லங்கன் விமான சேவையை தெரிவுசெய்வது சிறந்ததாக அமையும்.
இதேவேளை, கட்டாரின் நிலைமை மிகவும் சுமூகமாக காணப்படுகின்றது.

இங்கு பணியாற்றும் இலற்கையர்கள் குறித்து தகவலறிய வேண்டுமாயின் 0097 455 564 936 என்ற தொலைலபேசி இலக்கத்துடன் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435