இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: 2019இல் பொதுத்தேர்தல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் நேற்றிரவு (09) கலைக்கப்பட்டது.

இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

இதற்கமைய, 2019 ஜனவரி 05ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனவரி 17ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாகவும் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரை (2)(இ) உப உறுப்புரையின் மறறும் அரசியலமைப்பின் 62ஆவது உப உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டியுள்ள அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் (5) ஆவது உப உறுப்புரையின்கீழ் எனக்குரியதாக்கப்பட்டுள்ள தத்தவங்களின் வண்ணம் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்தப் பிரதகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிவிசேட வர்த்தமானியை தமிழ் மொழியில் பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435