இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை இரத்து செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இந்த மனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்திருந்தன.

இதற்கமைய, மனுக்களின் பரிசீலனை நேற்று ஆரம்பமாகிய நிலையில், இன்றைய தினம் இரண்;டாவது நாளாகவும் உயர்நீதிமன்றில் இடம்பெற்றது.

இதேநேரம், குறித்த மனுக்களை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த இடையீட்டு மனுக்களும் இன்றைய தினம் உயர்நீதிமன்றில் பரசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில், பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்தன ஆகிய மூன்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாம் இந்த மனுக்களை பரிசீலனை செய்தனர்.

இதன்போது தமது நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் வெளிப்படுத்தியிருந்த சட்டமா அதிபர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தின்படி நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை இரத்துச் செய்யுமாறும் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, மனுக்கள் மீதான பரிசீலனையை நிறைவுசெய்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மனு மீதான விசாரணை டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435