தூதரக ஆளனிப் பற்றாக்குறையால் தவிக்கும் சவுதி வாழ் இலங்கையர்கள்

சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் திருப்பியழைக்கப்பட்டுள்ளமையினால் தற்போது இருவர் மட்டுமே கடமைகளை முன்னெடுப்பதாகவும் இதனால் அந்நாட்டில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டும் ஏனைய சேவைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள மொழி பத்திரிகையான லங்காதீப செய்தி வௌியிட்டுள்ளது.

சவுதிக்கான இலங்கை தூதரகத்தில் தொழிலாளர் பிரிவு உட்பட ஏனைய பிரிவுகளில் 29 அதிகாரிகள் கடமையாற்றி வந்துள்ளனர். எனினும் தற்போது இரண்டாம் நிலை முகாமையாளர், தொழில் ஆலோசகர், முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் சுரக்‌ஷா பாதுகாப்பு இல்ல பொறுப்பாளர் ஆகியோர் மட்டுமே கடமைபுரிகின்றனர்.

இவர்களில் இரண்டாம் நிலை முகாமையாளர் மற்றும் தொழில் ஆலோசகர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 25ம் திகதியுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளநிலையில், நாட்டுக்கு திரும்ப முடியாமல் அங்கு தங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர்.

முகாமைத்துவ உதவியாளர்களில் ஒருவர் இம்மாதம் 21ம் திகதி அழைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சுரக்‌ஷா பாதுகாப்பு இல்ல பொறுப்பதிகாரி மற்றும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் ஆகியோரே எஞ்சியிருப்பர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் 128,000 பேருக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சுமார் 60,000 பேர் வீட்டுப் பணிப்பெண்களாவர். தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்து உதவி கோரி தொழிலாளர் நலன்புரி பிரிவுக்கு தினமும் சுமார் 25 பேர் வருகைத் தரும் நிலையில் சுரக்‌ஷா பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 10 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது சேவைக்காலம் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் சுமார் 2500 இலங்கையர்கள் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர். ஒப்பந்த காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் விசா எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர் என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர் நலன்புரி சேவை பிரிவானது அந்நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து பார்ப்பதுடன், தொழில் வாய்ப்புகள் குறித்த கட்டளைகளையும் பெற்றுக்கொள்கிறது. அந்த சேவை அப்பிரிவினால் மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது. அவ்வனைத்து சேவைகளும் தற்போது முடங்கிப்போயுள்ளது. தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு செல்வதற்கு கூட அங்கு அதிகாரகள் இல்லாமையினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் சார்பாக நிற்பதற்கு அங்கு ஒருவரும் இல்லாமல் போயுள்ளனனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சவுதி தொழிற்சந்தையில் இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளபோதிலும் கட்டளைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிகாரிகள் இல்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435