
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல பகுதிகளில் கடுமையான குளிர்காற்று வீசுவதுடன் கரையோரப்பகுதிகளில் அலைகளின் வேகமாக அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 9.00 மணி தொடக்கம் இக்காலநிலை ஆரம்பமாகக்கூடும் என்றும் இன்று நன்பகல் வடமேற்கிலிருந்து வட கிழக்காக மணிக்கு 10-25 கிலோமீற்றர் வேகத்தில் வீச ஆரம்பிக்கும் காற்று கரையோர பிரதேசங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு மற்றும் அதிகாலை வேலையில் பனிமூட்டமான காலநிலை காணப்படலாம் என்றும் இந்நிலை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை காணப்படலாம் என்றும் அந்நாட்டு தேசிய வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.