இலங்கை மாணவர்களுக்கு இனி ஜப்பானில் சிக்கல்

இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் மாணவர்கள் தொடர்பான நுழைவுத் தேவைகளை இறுக்கமாக்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் ஜப்பானால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, சீனா, வியட்நாம், நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் மாணவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கையே இதற்கான காரணமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதியக்கொள்கை எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய நடைமுறைப்படி ஜப்பானில் கல்விகற்க விரும்பும் மாணவர்கள், தமது விண்ணங்களுடன் சொத்துக்களின் விபரம், வங்கி அட்டை, வைப்புக்களின் சான்றுகளை சமர்ப்பிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்நு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேறிகளை தண்டிப்பதைவிட கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவது சிறப்பானது என்று ஜப்பான் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஜப்பானில் பெருமளவான கொரியா மற்றும் சீன நாட்டவர்கள் தமது மாணவர் வீசா முடிவடைந்ததும் அங்கேயே தங்கி சட்டவிரோதமாக வருமானம் ஈட்டிவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2015 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி ஜப்பானில் 13 ஆயிரம் தென்கொரியர்களும், 8 ஆயிரத்து 700 சீனர்களும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை சட்டவிரோத குடியேறிகளின் முதல் 10 பட்டியலுக்குள் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435