சுற்றுலாப்பயணிகளை அன்புடன் வரவேற்ற டுபாய்
கொவிட் 19 காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை தடைப்பட்டிருந்த நிலையில் இன்று (07) முதல் தொகுதி சுற்றுலாப்பிரயாணிகள் டுபாயை சென்றடைந்தனர்..
கொவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்பயணிகள் வரவேற்கப்பட்டனர்.
முகக்கவசம், கையுறை என்பவற்றை அணிந்திருந்த குறித்த சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டு நேரப்படி இன்று நன்பகல் 12.00 மணியளவில் டுபாயை சென்றடைந்தனர்.
கொவிட் 19 காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளில் விமானப்போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க டுபாய் தன்னை தயார்படுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.