இலங்கை வர டுபாயில் காத்திருந்த பெண் பசியால் இறந்தாரா?

இலங்கைக்கான விமானத்திற்காக டுபாய் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கைப் பெண் உணவின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் டுபாய்க்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பஸ்ஸர அரலியாகமவைச் சேர்ந்த 30 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் திலும் பிரிங்கிக்கா என்ற பெண்ணே இவ்வாறு உணவின்றி உயிரிழந்துள்ளார்.

அப்பெண் பணியாற்றிய வீட்டில் பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளான அப்பெண் அது தொடர்பில் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து உறவினர்கள் அனுப்பிய விமான டிக்கட்டுடன் விமான நிலையத்திற்கு வந்த பெண் விமானம் வரும்வரை பல நாட்கள் காத்திருந்தார் என்றும் அந்த சந்தர்ப்பத்தில் பசியின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு நாடு திரும்புவதற்காக உறவினர் அனுப்பிய விமான டிக்கட்டின் திகதியை மாற்றி அப்பெண்ணிடம் கொடுத்தமையினால் வராத விமானத்திற்காக பல நாட்கள் காத்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த பெண் இலங்கையில் உள்ள உறவினருக்கு அனுப்பிய கடிதத்தில் தனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெற்றமை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும் அந்நாட்டு வைத்தியர் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்ற விசேட வைத்தியநிபுணர் ருஹுல் ஹக் ஆகியோர் வழங்கியுள்ள மரணவிசாரணை அறிக்கைக்கமைய உறுதியான காரணம் எதுவும் கூற முடியாதுள்ளது என்று திடீர் மரண விசாரணை அதிகாரி கீர்த்தி ஜயந்த விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஹிரு நியுஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435