இலங்கையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தொழிலின் நிமித்தம் இஸ்ரேல் நாட்டுக்கு 600 இற்கும் அதிகமானோர் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, கடந்த ஆண்டில் விவசாய தொழிலின் நிமித்தம் 359 பேர் இஸ்ரேல் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 265 விவசாய தொழிலின் நிமித்தம் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் திணைக்களத்தினூடாக இஸ்ரேலுக்கு தொழில்வாய்ப்புக்காக ஆட்சேர்ப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றனது.
கடந்த ஆண்டு முழுவதும், 359 பணியாளர்கள் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் 266 பேர் அந்த நாட்டுக்கு பணிக்காக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் காலங்களிலும் இலங்கையிலிருந்து தொழில்வாப்புக்காக இஸ்ரேல் செல்லும் பணியாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படாலம் எனத் தெரிவிக்கப்படுகிறது.