சம்பளம் ஒழுங்கில்லையேல் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் பணியாற்றும் நிறுவனம் ஒழுங்காக சம்பளம் வழங்குவதில்லையா? நிறுவனத்திற்கு எதிராக எவ்வாறு முறைப்பாடு செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

முதலில் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் முழுமையான பெயரையும்  அமைந்துள்ள இடத்தையும் எழுதுங்கள்

நிறுவனத்தின் முகாமையாளர் அல்லது பொறுப்பானவரின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடுங்கள்

உங்களுடைய கடவுச்சீட்டு மற்றும் கட்டார் அடையாள அட்டை பிரதியை இணையுங்கள்.

மெயின் அல் அடிடியா வீதியிலுள்ள இலக்கம் 13 அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள முறைப்பாட்டு விண்ணப்பத்தை நிரப்பி நீங்கள் கொண்டு சென்ற ஆவணங்களுடன் விண்ணப்பத்தையும் தொழில் அதிகாரியிடம் கையளியுங்கள்.

உங்கள் நிலையை விளக்கி அவர்கள் ஏதும் ஆவணங்கள், ரசீதுகள் அல்லது முறைப்பாடு செய்ததற்கான ஆதாரத்தை தரும்பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.

குறித்த அதிகாரி மேலதிக நடவடிக்கைகளையும் முகாமையாளர் அல்லது பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளல் போன்ற விடயங்களை மேற்கொள்வார் முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பார்.

புலம்பெயர் தொழிலாளரின் முறைப்பாடு விசாரணை செய்யப்பட்ட பின்னர் சிறந்த முறையில் நீதிமன்ற உதவியின்றி பிரச்சினைகளை தீர்க்க அந்நாட்டு தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளும். நிறுவனத்துடன் தொடர்புகொண்டு தேவையான ஆவணங்கள், உறுதிப்பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு கோரும், இணக்கப்பாட்டு முறையில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்படும்.

உங்களுக்குத் தேவையான மேலதிக தகவல்களை, கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரியில் தொடர்புகொண்டோ அல்லது இணையதள முகவரியினூடாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

Call 44406406 for more information
Ministry Of Labour and Social Affairs
http://www.mlsa.gov.qa/
Address: Doha ,Diplomatic Area Beside Dolphin Tower, Doha, Qatar
Phone:+974 4424 1101

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435