இஸ்ரேல் தொழில்வாய்ப்பு பணியகத்தினூடாக மட்டுமே

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய, இனிவரும் காலங்களில் இஸ்ரேலுக்கான பணியாளர்களை அரசாங்கமே அனுப்பி வைக்கும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (14) அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இஸ்ரேல் நாட்டுக்கு வீட்டுப் பராமரிப்பாளர்கள் மற்றும் விவசாயத்துறைக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையை கடந்த காலங்களில் தனியார் துறையினரால் அனுப்பப்பட்டவர்களிடமிருந்து இலங்கை முகவர்கள் அதிக தொகையான பணத்தை அறவிட்டமை தெரியவந்ததையடுத்து அந்நாட்டு அரசாங்கம் நேரடியாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினூடாக பணியாளர்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது என்று இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வொப்பந்ததம் காரணமாக எந்தவொரு தனியார்துறையினரும் இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்ப முடியாது. எனவே போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணிய சட்டத்திற்கமைய, வௌிநாடுகளில் உள்ள வேறு துறை வேலைவாய்ப்புக்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் பணியை பணியகத்தினூடாகவே முன்னெடுக்க முடியும். வௌிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக செல்வோரிடம் பல்வேறு காரணங்களை கூறி முகாமையாளர்கள் பணத்தை அறவிடுகின்றனர். உண்மையிலேயே மருத்துவ அறிக்கை போன்றவற்றுக்கு மட்டுமே பணம் அறவிடப்படவேண்டும் என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435