புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கண்ணியமான வேலை

2030 பேண்தகு அபிவிருத்திக் கொள்கைகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நன்மைப்பயக்கக்கூடிய பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவுக்கான புலம்பெயர்ந்தோர் மன்றம் (Migrant Forum in Asia – MFA), அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான இடை பிராந்திய மையம் (Cross-regional Center for Refugees and Migrants – CCRM), தெற்காசிய பிராந்திய தொழிற்சங்க கவுன்சில் (South Asian Regional Trade Union Council – SARTUC), பசுபிக் பிராந்திய அரச சாரா நிறுவனங்களின் அமைப்பு மற்றும் சொலிடாரிட்டி சென்ரர் ஆகியன இணைந்து வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. பேண்தகு அபிவிருத்திக் கொள்கையின் 8 நோக்கில் புலம்பெயர் தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளருக்கும் கண்ணியமான வேலை, அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான வேலைச்சூழலை உருவாக்குதல், குறிப்பாக பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

இலங்கை அரசானது புலம்பெயர்வுக்கான உலக ஒப்பந்தத்தை (The Global Compact for Migration – GCM) 2018ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் முறையான ஆட்சேர்ப்பு முறையினூடாக கண்ணியமான பணியை ஊக்குவிக்க வேண்டும் என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்புக்கான மற்றும் தொழில் வழங்குனர்களுக்கு பணம் திரும்பச் செலுத்தும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கடனாளியாக்கக்கூடிய முறைகளை தடுப்பதுடன் சிறந்த சட்டதிட்டங்கள் மற்றும் கண்காணிப்பு என்பவற்றை மேற்கொள்ளவேண்டிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புலம்பெயர் தொழிலாளரும் உள்ளடங்குகின்றனர். பல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் இதில் உள்ளடங்குகின்றனர். நெருக்கமாகவும் சுகாதார வசதிகளின்றியும் உள்ள தங்குமிடங்களில் உள்ள பணியாற்றும் பல புலம்பெயர் தொழிலாளர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வீட்டுப் பணிபெண்களாக பணியாற்றும் புலம்பெயர் பெண்கள் நீண்ட மணித்தியாலங்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக பணியிடங்களில் ஏற்படும் வன்முறைகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய முடியாது நிலையில் உள்ளனர்.

தற்போதைய உலக பொருளாதார முறையின் காரணமாக குறைந்த ஊதியத்துடன் கூடிய தொழிலுக்கு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்கின்றனர். இதனால் இவர்கள் ஒழுங்கான வாழ்கைச் செலவை சம்பாதித்து தமதும் குடும்பத்தினதும் நிலைத்தன்மையை நிலைநிறுத்த முன்னர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கடன் பட்டிருப்பார்கள். இன்றைய கொரோனா தொற்று பிரச்சினையானது உலகம் முழுவதும மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை திடீர் வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் முகவர்களுக்கு, உப முகவர்கள், குடும்ப அங்கத்தினர்கள், சிறுவியாபாரிகளுக்கு கடன்பட்டவர்கள்,

இந்த நெருக்கடியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் இருந்தால், அதை நாம் தீவிரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அத்துடன் ஆட்சேர்ப்புக்கான ஒரு முதலாளி ஊதிய மாதிரியை நோக்கி நகர்வதும் அவசியம். எந்தவொரு தொழிலாளியும் கடனில் சிக்கிக்கொள்ளாத பாதுகாப்பான தொழிலை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்புரி செயற்றிட்டங்களுக்கு ஊழியர்களை இணைத்துகொள்வது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றமையானது பிரதேச ஆலோசனை செயற்பாட்டில் அடையாளங்காணப்பட்டுள்ளது. இணைத்துக்கொள்ளல் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து 2016ம் ஆண்டு கொழும்பு கலந்துரையாடலில் அங்கத்துவ நாடுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக அங்கத்துவ நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளல்/ அழைத்தல் என்பவற்றுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடக்கூடாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு அபுதாபி கலந்துரையாடலில் அதன் நான்காவது அமைச்சரவை ஆலோசனை வழங்கலின் போது சட்டரீதியான, நியாயமான, ஒழுக்கமான முறையில் தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதை நோக்காக கொண்டு அங்கத்துவ நாடுகள் ஒத்துழைப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் மற்றும் முடக்குதல் போன்ற செயற்பாடுகளை நாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கின்ற காரணத்தினால் பல நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். சில நாடுகளில் சம்பளமின்றி பலவந்தமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சிலர் சம்பளக் குறைப்பினாலும் சிலர் சம்பளமேயின்றியும் சிரமப்படும் நிலைமை காணப்படுகிறது.

உலகம் பூராவும் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று நிலை பரவியுள்ளமையினால் புதிதாக தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதையும் மீள வரும் தொழிலாளர்களை சேவையில் இணைத்துக்கொள்வதையும் இடைநிறுத்தியுள்ளன. இதனால் தொழில் குறித்த நிச்சயத்தன்மையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் விடுமுறை பெற்று வீடு திரும்பியுள்ள பல புலம்பெயர் தொழிலாளர்கள் தமது தொழில் மீண்டும் கிடைப்பதில் ஐயத்துடன் உள்ளனர். மீண்டும் அத்தொழில்களுக்கு செல்ல முடியுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோன வைரஸ் காரணமாக வௌிநாடுகளில் உள்ள பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கவனம் செலுத்தினால் அவர்களுடைய தொழில் இழப்பு மாத்திரமன்றி அவர்களை சேவையில் இணைத்துக்கொண்ட நபர் அல்லது மூன்றாம் நபருக்கு கடன் செலுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடனை மீள செலுத்தல் மற்றும் சம்பாதிக்க முடியாத நிலை என்பவற்றின் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான செயற்பாடு மற்றும் முன்மொழி வழங்குவதற்கான செயற்றிட்டத்தை மேம்படுத்துவதற்காக 2020 மே தினத்தின் நிமித்தம் 2030 பேண்தகு அபிவிருத்தி நோக்குகளில் புலம்பெயர்வுக்கான உலக இணைவு, ILOவின் நியாயமான முறையில் இணைத்தலுக்கான நிகழ்ச்சி நிரல், IOM IRIS தரம், கொழும்பு செயற்பாடு, அபுதாபி கலந்துரையாடல் என்பவற்றுக்கு அமைய சிறந்த தொழில் பெற்றுகொள்வதற்காக இணைத்துகொள்ளும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டணம் அறவிடப்படக்கூடாது என்று அரசிடம் ​கோருகின்றோம்.

மேலும் கீழே சில முன்மொழிவுகளை வழங்கியுள்ளோம்.

முன்னெடுக்கப்படவேண்டிய செயற்றிட்டங்கள்:

  • நிகழ்கால கொவிட் 19 தொற்று போன்ற பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களை கவனத்திற்கொண்டு மேற்கொண்டுள்ள கொள்கை மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்யுமாறு அரசாங்கங்களிடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

 

  • பிரச்சினைக்குரிய காலப்பகுதியில் தனிப்பட்ட ரீதியான இணைத்தல் நிறுவனங்கள் (தோற்றம் மற்றும் இலக்கு நாடுகள் என நாடுகள் அர்த்தப்படுத்திக்கொண்டுள்ளன) அவர்களின் ஊழியர்களுக்கு குறிப்பாக அவர்களின் ஒப்பந்தத்தில் முதல் 6 மாதங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த ​வேண்டும்.

 

  • தனிப்பட்ட ரீதியான இணைப்பின் போது சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் பிரச்சினைக்குரிய காலங்களில் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அதன் அங்கத்துவர்களுக்கான அவசரகால நிதியத்தை உருவாக்க வேண்டும்.

 

  • தாம் அனுப்பியுள்ள புலம்பெயர் தொழலாளர்களின் நிலைமை குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தனியார் தொழில்வழங்கல் நிறுவனங்களிடம் அரச உத்தரவிடவேண்டும்.

 

  • கட்டணம் அறிவிடப்பட்டுள்ள மற்றும் அறவிட எதிர்பார்த்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டியலை வழங்குமாறு அரசாங்கம் தனியார் தொழில்வழங்குல் நிறுவனங்களிடம் கோரவேண்டும்.

 

  • COVID-19 வைரஸ் தொற்று காரணமாக இணைத்தலுக்கான கட்டணம் செலுத்தியும் சேவைக்கு அனுப்படாத தொழிலாளர்களுக்கான செலவை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

 

  • தொழில் இழந்த அல்லது தற்போது சென்ற நாடுகளில் அநாதரவாக நிற்கும் புலம்பெயர் தொழிலாளர்களை நாடுகளுக்கு அழைத்து வருவதற்கு தனியார் தொழில் வழங்கல் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

  • COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான தொழிலாளர்களுக்கு அவர்கள் சென்ற நாடுகளில் அல்லது சொந்த நாட்டில் வைத்தியத்திற்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தனியார் தொழில் வழங்கல் நிறுவனங்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.

 

  • இணைத்துக்கொள்ளப்படும் நபருக்கு வசதிகளை வழங்கும் ஒப்பந்ததில் தற்போது வசிக்கும் நாடுகளில் அநாதரவாக நிற்கும் தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பிப்பதற்கு தனியார் தொழில் வழங்கல் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

  • சேவையில் இணைக்கும் முகவர் நிலையங்களின் சங்கங்கள் அதன் அங்கத்தவர்களுக்கு ILOவின் நியாயமான ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் IOM IRIS தரத்திற்கு அமைவானதாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

 

  • தொழில் இழந்து மீண்டும் நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் பட்டியல்படுத்துவதுடன் மீண்டும் தொழில்வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் தொழில்வழங்கும் முகவர் நிறுவனங்கள் மற்றும் வேறு வழியில் செல்வதை தவிர்த்து நேரடியாகவும் உடனடியாகவும் அனுபவத்துடன் மீண்டும் சேவையில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435