உரிய தினத்தில் சம்பளம் கிடைக்கவில்லையா?

சம்பள தினத்திலிருந்து 7 நாட்களுக்குள் உரிய சம்பளத்தை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். அந்நிறுவத்திடமிருந்து அனுமதி சான்றிதழ் (No-Objection Certificate -NOC) பெறாமலேயே நீங்கள் விழகிக்கொள்ளலாம். அதற்கான உரிமை உங்களுக்குள்ளது என்கிறது கட்டார் அரசாங்கம்.

கட்டார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக அலுவல்கள் அமைச்சு இதனை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கைக்கு அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் பொதுவில் நடைமுறைக்கு வரவுள்ளது. கட்டாரின் சம்பள உரிமை முறையின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பள பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்னும் சில நிறுவனங்கள் அதனை சரியாக செயற்படுத்துவதில்லை. அவ்வாறான நிறுவனங்களை அடையாளங்கண்டு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தகைய நிறுவனங்கள் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன் அரசாங்கம் வழங்கும் சலுகைகளும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வார காலத்திற்குள் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் குழு அமைக்கப்படும். முன்னர் இத்தகைய பிரச்சினைகள் சட்ட மூலமாக நீதிமன்றில் தீர்க்கப்பட்டது. இனி வரும் காலங்களில் மூன்றே வாரத்தில் இக்குழுவினால் தீர்த்து வைக்கப்படும்.

தொழில் செய்யும் நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் ஒருவர் குறித்த குழுவிடம் முறைப்பாடு செய்து அது உண்மையென நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒப்பந்த காலம் முடிவடையாவிட்டாலும் தொழிலாளர் புதிய தொழிலை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதேநேரம் குறித்த நிறுவனம் அரசாங்கத்திடம் பெற்றுள்ள நல்லெண்ணத்தை இழந்து வகைப்படுத்தல் பட்டியலில் பெற்றிருக்கு இடத்தையும் இழக்கும்.

ஆனால் தொழிலாளர் மேல் பிழை இருப்பது அடையாளங்காணும் பட்சத்தில் நிறுவனத்தில் இருந்து குறித்த ஊழியரை நீக்க குழு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும். அவ்வாறு வேலையிழக்கும் நபர் மறுபடி நான்கு வருடங்களுக்கு நாட்டுக்குள் நுழைய முடியாது. இந்த நான்கு வருடம் மேலும் அதிகரிக்கப்படலாம். அவர் மேலுள்ள தவறைப் பொருத்து அது தீர்மானிக்கப்படும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒழுங்கான முறையில் ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்த பெற்றுக்கொள்வதற்கான சுவிஸ் ஆளணி நிறுவனத்தை உள்வாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்நிறுவனத்தின் கிளைகள் உலகின் 39 நாடுகளில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிறுவனம் ஊழியர்களை உள்வாங்குவதற்கு மருத்துவ பரிசோதனை, ஆவணங்கள் சரிபார்த்தல், சான்றிதழ்களை உறுதிப்படுத்தல் மற்றும் கையொப்பமிடுதல் உட்பட அனைத்து பொறுப்புக்களும் அந்நிறுவனத்திடமே ஒப்படைக்கப்படும். கட்டாரில் இயங்கும் எந்தவொரு நிறுவனத்திற்குமான ஆளணியை இச்சுவிஸ் நிறுவனத்தினூடாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். அந்நிறுவன சேவைக்கான அனைத்து கட்டணங்களையும் தொழில் வழங்குனரே செலுத்தவேண்டும். தொழிலாளர் அல்ல. ஆனால் சேவைக்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435