உரிய நேரத்தில் மின், நீர் கட்டணம் செலுத்தாவிடின் அபராதம்

உரிய நேரத்தில் மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்தாவிடின் 100 திர்ஹம் அபராதமாக செலுத்தப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் மின்சார மற்றும் நீர் அதிகாரசபை(Federal Electricity and Water Authority – Fewa) அறிவித்துள்ளது.


உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கு நான்கு நாட்கள் மேலதிகமாக வழங்கப்படும் என்றும் கையடக்கத் தொலைபேசிக்கு அறிவுறுத்தல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட தினம் தொடக்கம் இம்மேலதிக நான்கு நாட்கள் கணிக்கப்படும் என்றும் அவ்வதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நேரத்தில் செலுத்தாவிடின் 100 திர்ஹம் நுகர்வோர் கட்டணத்துடன் இணைக்கப்படும். செலுத்தப்படாத கட்டணம் காரணமாக இணைப்பை துண்டிக்காதிருப்பதற்கு 100 திர்ஹம் செலுத்துமாறு ஆரம்பத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அத்தொகை தற்போது கட்டணத்துடன் சேர்க்கப்பட்டு கட்டாயம் செலுத்தப்படவேண்டும். இல்லையேல் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும் என்று குறித்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் முகம்மட் ஷாலீ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435