உள்நுழையும் – வெளிச்செல்லும் இலங்கை பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவித்தல்

உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளுக்கும் வெளிவிவகார அமைச்சு முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பணவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பிரயாணிகளையும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கின்றது.

இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறுவதற்கோ உரிய அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தவிர எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கம் அளிக்கவில்லை என வெளிநாட்டு அமைச்சு இதன்மூலம் அறிவிக்கின்றது.

நாட்டில் அதிகரித்து வரும் நோயாளர் தொகையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீளழைத்து வருவதற்கான செயன்முறையானதுஇ மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்படும்.

மேலதிக மற்றும் உண்மையான தகவல்களுக்காக வெளிநாட்டில் வசிப்பவர்கள் உங்கள் அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் கவலைகளை இலங்கை வலை இணையதளத்தில் https://www.contactsrilanka.mfa.gov.lk/  என்ற முகவரியில் பதிவு செய்யவும்.

– என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435