விமான நிலையம் திறக்கப்படுவது குறித்து தீர்மானம் இல்லை

விமான நிலையம் திறக்கப்படும் தினம் குறித்து உறுதியாக எதுவும் கூறமுடியாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொவிட் 19 பரவல் காரணமாக உலக நாடுகள் பலவற்றின் விமானநிலையங்கள் இன்னமும் அதன் சேவைகளை ஆரம்பிக்கவில்லை. வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் மட்டும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, விமானநிலையத்தின் பொதுமக்கள் பார்வையிடும் பகுதி நேற்று (26) திறக்கப்பட்டதாக விமானநிலைய, விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பண்டாரநாயக்க சர்வதேச விமாநிலையத்தை பார்வையிட சென்றபோது அவரிடம் சிறுமி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கமைய இப்பார்வையாளர் பகுதி திறக்கபட்டதாக ஜி.எ.சந்திறசிறி தெரிவித்தார்.

இப்பகுதிக்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் கொவிட் 19 பரவலுக்குப் பின்னர் விமானநிலைய செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த தௌிவான அறிவை பெற்றுக்கொள்வார்கள். பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்கள் இலவசமாக இப்பகுதியை பார்வையிடலாம். ஏனையோரிடம் 50 ரூபா கட்டணம் அறவிடப்படும். இக்கட்டணம் குறித்த பகுதியின் பொது வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435