எகிப்தில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்

எகிப்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 54 இலங்கை பெண்ணை கொலை செய்த 22 வயது எகிப்து பிரஜையை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணுடனான காதல் உறவு பிரச்சினையில் முடிந்ததையடுத்தே அவ்விளைஞன் இலங்கை பெண்ணை கொலை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணும் குறித்த இளைஞனும் முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டில் பணியாற்றி வந்த நிலையில் பழக்கமேற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் அப்பெண்ணை திருமணம் செய்து அவருடன் இலங்கைக்குச் செல்ல தனது குடும்பத்தினருடன் அனுமதி கேட்டுள்ளார். எனினும் குடும்பத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். மீண்டும் பணிக்குச் சென்ற இளைஞன் குறித்த பெண்ணுடனான தொடர்பாடலை தவிர்த்துள்ளார். ஆனால் அப்பெண் தாம் வழமையாக சந்திக்கும் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் சந்திக்குமாறு வலியுறுத்தினார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்து அவ்விளைஞனின் குடும்பத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்போவதாகவும் குறித்த இளைஞனின் சகோதரனை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் இலங்கை பெண்ணுடன் தொடர்புகொண்டு தனது குடும்பத்தினர் தனது ஊரில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். எனினும் அப்பெண் தொடர்ச்சியாக அவ்விளைஞனை அச்சுறுத்தி வந்தமையினால் தன்னை சந்திக்குமாறு அழைத்த அவ்விளைஞன் குறித்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து அழைத்துச் சென்று கழுத்தில் கத்தியால் குத்தி வீதியோரத்தில் வைத்து தீ வைக்க முயற்சி செய்துள்ளார். அத்தருணம் வாகனமொன்று கடந்து சென்றமையினால் குறித்த இளைஞன் தப்பிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கையடக்க தொலைபேசி மற்றும் கொலைக்கு பயன்படுத்தி ஆயுதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டன. குறித்த இளைஞன் மீது கொலை மற்றும் கூரிய ஆயுதம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டு சிறையிடலைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435