ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி உட்பட ஏனைய பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு வானிலை மற்றும் அனர்த்தம் தொடர்பான தேசிய மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் இவ்வெப்பநிலையானது மேலும் அதிகரிக்கும் என்பதால் சூரிய வௌிச்சம் நேரடியாக படும் வகையில் வௌியில் செல்வதை தவிர்த்துக்கொள்வது பாதுகாப்பானது என்று அந்நிலையம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் மேக மூட்டம் ஏற்படலாம் எனவும் கரையோரங்களில் வீசும் காற்றின் தாக்கம் நிலப்பகுதிக்கும் ஏற்படுமாயின் மணற்சூறாவளி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வலைக்குடா மற்றும் ஓமான் கரையோரப் பிரதேசங்களில் காலை மற்றும் மாலை வேளையில் அலைகளின் வேகம் கடுமையாக இருக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள அனர்த்த எச்சரிக்கை மத்திய நிலையம் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறும் எச்சரித்துள்ளது.