இலங்கையருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கைச்சாத்திட்டுள்ளது.
இதற்கமைய, IM ஜப்பான் நிறுவனத்திற்கும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜப்பான் மொழித் தேர்ச்சி N4 தேர்ச்சி பெற்ற அல்லது பாஷை தெரிந்த 18-30 வயதுக்கும் இடைப்பட்ட இலங்கையருக்கு இவ்வாய்ப்பு கிட்டியுள்ளது.
பராமரிப்பாளர் (Caregiver) பணிக்காக 150 பெண்களுக்கான வேலைவாய்ப்பு காணப்படுவதுடன் நிர்மாணத்துறை பணிக்கு ஆண்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.
மாதாந்தம் 135,000 யென் (182,250 & ரூபா) சம்பளமாக வழங்கப்படும். நிர்மாணத்துறைக்கு ஜப்பான் மொழி தேர்ச்சி இருப்பின் தகுதியாக கொள்ளப்படும். இவ்வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் இலங்கையர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி இன்றாகும். எனவே இன்றே இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விற்பனை பிரிவில் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதுடன் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அல்லது பணியக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பதிவு செய்துக்கொள்ள முடியும்.
மேலும், இவ்வேலைவாய்ப்பு தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்றும் (21) நாளையும் (22) பணியக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. பங்குபற்ற விரும்புவோர் அவசியமான ஆவணங்களுடன் காலை 9.30 ஆரம்பமாகவுள்ள இத்தௌிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பணியகம் அறிவித்துள்ளது