ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் விமானநிலையம் திறக்கப்படுமா?

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் திறப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்த வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்கவிப்பு, சுற்றுலாத்துறை ம்றறும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (14) தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டுவர்கள் இலங்கை வருவதற்கு முன்னர் வௌிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரமுடியும் என்று நாம் நம்புகிறோம். தற்போது சுமார் பத்தாயிரம் பேர் வரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 20,000 பேர் வரை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள இடவசதிகளுக்கு ஏற்ப அவர்கள் அழைத்து வரப்படுவார்கள்.

சுற்றுலாத்துறைக்காக பண்டாரநாயக்க விமானநிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்நாட்டுக்கு சுற்றலாப்பயணிகளை குழுக்களாக அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்துவோம். அவ்வாறு வரும் அனைத்து சுற்றுலாப் பிரயாணிகளும் பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள். அப்பரிசோதனைக்கமைய அவர்கள் சுற்றுலாவுக்கான அனுமதி வழங்கப்படும்.

அதுமட்டுமன்றி சுற்றுலாப்பிரயாணிகள் தொடர்ந்து சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதியை சுற்றுலாத்துறை அதிகாரசபையினூடாக மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435