ஓமான் வீட்டு வாடகையால் தடுமாறும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

ஓமானில் பணிநிமித்தம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் வீட்டு வாடகை என்ற பெயரில் சுரண்டப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பணிக்காக செல்லும் புலம்பெயர் தொழிலாளர் தங்குவதற்காக எடுக்கப்படும் வாடகை வீடுகளுக்கு ஒரு வருட வாடகை வழங்குமாறு நிர்ப்பந்திப்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக சில நிறுவனங்கள் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களை இணைக்காது மூன்று மாதம், ஆறு மாதம் போன்ற குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு இணைக்கப்படுகின்றனர். அவ்வாறு செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்குவதற்கு வழங்கப்படும் வீடுகளுக்கு ஒரு வருட வாடகை அறவிடப்படுவதாகவும் காலம் முடிந்ததும் அவை மீளக் கிடைப்பதில்லை என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், மாநகரசபை கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாடகை அதிகரிக்கப்படுவதாகவும் தமது ஒப்பந்த காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்கு திரும்பும் போது மீள பெறவேண்டிய பெருந்தொகைப் பணம் வாடகை வீட்டு உரிமையாளரிடம் சிக்கிக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் அந்நாட்டு சட்டப்படி மூன்று, ஆறு மற்றும் ஒரு வருட ஒப்பந்தத்தில் வீடுகள் வழங்க முடியும். எனினும் வீட்டு உரிமையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களிடம் பணம் கறப்பதிலேயே குறியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435