ஓமான் வீஸா கட்டணம் 50 வீதத்தால் அதிகரிப்பு!

அனைத்து வௌிநாட்டு தொழிலாளர்களுக்கான தொழில் வீஸா கட்டணத்தை 50 வீதத்தால் உயர்த்த ஓமான் அரசு தீர்மானித்துள்ளது.

ஓமான் மனித வள அமைச்சின் ட்விட்டர் கணக்கினூடாக இத்தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

இப்புதிய நடைமுறைக்கமைய தனியார் துறை வேலைவாய்ப்புக்காய் விண்ணப்பிப்பவர் அல்லது வீஸாவை புதிப்பிப்பவர் தற்போது செலுத்தப்படும் 201 ஓமான் ரியாலுக்குப் பதிலாக 301 ஓமான் ரியாலை செலுத்த வேண்டும்.

ஓமானில் தற்போது 1,824,282 இற்கும் மேற்பட்ட வௌிநாட்டினர் பணிபுரிகின்றனர். தற்போது அந்நாடு எதிர்நோக்கும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் நாட்டின் நிலைத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை குறைப்பதற்கு இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வறிக்கை தௌிவுபடுத்தியுள்ளது.

இக்கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் வர்த்தமாணியில் வௌியிடப்பட்ட பின்னர் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மனித வள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

படிப்படியாக வீழ்ச்சியடையும் எண்ணெய் விலை காரணமாக 2016 பாதீட்டில் செலவீனத்தை குறைத்து, மக்களிடம் வரி அறவிடவுள்ளதாக ஓமான் அரச ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இக்கட்டண அதிகரிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் 7 மாதங்களுக்குள் பாதீட்டில் துண்டு விழும் தொகை 4,023 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. அது தற்போது 68 வீதமாக அதிகரித்துள்ளது.

மேற்குறித்த காரணங்களை கவனத்திற்கொண்டு தீர்வை பெறும் பொருட்டு வௌிநாட்டு தொழிலாளர்களின் வீஸா கட்டணத்தை 50 வீதத்தால் அதிகரிக்க ஓமான் அரசு தீர்மானித்துள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435