“கஃபாலா” முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராகிறதா சவுதி அரேபியா?

சவூதி அரேபியா வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சர்ச்சைக்குரிய “கஃபாலா” முறையை திறம்பட முடிவுக்கு கொண்டுவரக்கூடிய முக்கிய தொழிலாளர் சீர்திருத்தங்களை அறிவிக்க உள்ளது என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் இனி வேலைகளை மாற்றவோ, வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது நாட்டை நிரந்தரமாக விட்டு வெளியேறவோ தமது தொழில் வழங்குநர்களின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று தங்கள் பணி அனுமதி தேவையில்லை என்று அடையாளம் தெரியாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒன்லைன் மால் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. புதிய விதிகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் எதிர்வரும் 2021 ஆரம்பத்தில் இவை நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் அப்பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ ‘டிவிட்டர்’ தளத்தில் கருத்து வௌியிட்ட அந்நாட்டு மனிதவள மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தொழில் சந்தையை அபிவிருத்தி செய்வதற்கான சில மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பணிகள் நிறைவடைந்த பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அந்நாட்டு தொழில் சந்தையை சர்வதேச தரத்திற்கமைய, போட்டித்தன்மை, கவர்ச்சி மற்றும் இலகுத்தன்மை கூடியதாக மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கான அழைப்பை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

சவுதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பல தசாப்பதங்களாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த “கஃபாலா” அல்லது “sponsorship” முறையானது உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு அடிமைத்தனத்தின் வடிவமாக விமர்ச்சிக்கப்படுகிறது. சில பொருளாதார வல்லுநர்கள் இது ஒரு சமநிலையற்ற தொழிலாளர் முறையையும் நிலைநிறுத்துகிறது என்று வாதிடுகின்றனர், அங்கு தனியார் முதலாளிகள் மலிவான மற்றும் எளிதில் சுரண்டக்கூடிய வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். உண்மையில் இந்நடைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டால் சவுதி அரேபிய இராச்சியத்திலும் சுமார் 10 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அச்செய்தி பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒரு தொழில் வழங்குநர்களுடன் பிணைக்கப்பட வேண்டும், அவர்கள் தொழில் செய்யும் இடங்களை மாற்றவோ, வங்கிக் கணக்கைத் திறக்கவோ, விடுமுறையில் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது இழந்த அடையாள அட்டையை மீள பெறவோ தொழில் வழங்குநரின் அனுமதி அவசியம். சில மத்திய கிழக்கு நாடுகள் கஃபாலா முறைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்காமல் திருத்தங்களை மட்டும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதியில் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள 20வது தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரங்களின் குழு உச்சிமாநாட்டில் தொழிலாளர் விதிகளை மாற்றியமைக்கும் இந்த திட்டமானது பொது தொடர்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும். அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானுடைய “விஷன் 2030” பொருளாதார மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு திறமை மற்றும் முதலீட்டிற்கு இராச்சியத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றத்தின் ஒரு பகுதியாக அமையும்.

எனினும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நிலைமைகளை மாற்றுவது தேசியவாதம் மற்றும் இனவெறி அதிகரித்து வரும் உள்நாட்டு சூழலில் அரசியல் ரீதியாக முக்கியமான தலைப்பாக அமையும். இராச்சியத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர், குடிமக்களின் வேலையின்மை ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருப்பதால், சில சவுதி குடிமக்கள் வெளிநாட்டவர்கள் சவுதி தொழிற்சந்தையில் இருந்து வௌியேற்றுவதன் அவசியம் குறித்த வாதிட்டு வருகின்றனர்.

இந்த “கஃபாலா” முறையினால் முதலில் பாதிக்கப்படுவது அந்நாட்டு குடிமக்கள்தான் என்ற வாதத்தை முன்வைக்கிறது மால் செய்திச்சேவை. இந்த முறை எவ்வாறு நாட்டில் தொழிலின்மையினை ஏற்படுத்தியுள்ளது என்றும் அச்சேவை விளக்கமளித்துள்ளது.
.
குறித்த தொழிற்சட்ட மாற்றங்களை இந்த ஆண்டு ஆரம்பத்தில் வௌியிடவே சவுதி ஆரேபியா திட்டமிட்டுருந்தது. எனினும் உலக நாடுகளை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொவிட் 19 காரணமாக தாமதமாகியுள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதமளவில் சவுதி அரசாங்கம் “கஃபாலா” முறையை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக மால் செய்தி சேவை செய்தி வௌியிட்டிருந்தது. அது கண்டனத்துக்கு உரியது என்றும் அந்நாட்டு பிரஜைகள் சிலர் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இதற்கு அரசாங்கம் மறுப்பு. இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் எதிர்வினை மிகவும் கலவையாக உள்ளது, சிலர் திருத்தங்கள் அவசியம் என்றும் சிலர் தொழிலின்றி இருக்கும் உள்நாட்டு பிரஜைகள் காயப்படுத்துவதாகவும் வெளிநாட்டினருக்கு அதிக அதிகாரம் தருவதாகவும் அமையும் என்றும் கருத்து வௌியிட்டிருந்தனர்.

https://www.bloomberg.com/

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435