கொவிட்-19 ஆல் 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

கொவிட்-19 தொற்று காரணமாக 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களுள் அதிகமானோரின் மரணங்கள் சவுதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் 34  இலங்கையர்கள் மரணித்துள்ளனர்.

குவைத்தில் 21 பேரும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹ்ரேன் மற்றும் ஜோர்தான் முதலான நாடுகளில் தலா இரண்டு பேரும்இ இஸ்ரேல் மற்றும் ஈரானில் தலாஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.

அத்துடன், பிரித்தானியாவில் 5 பேரும், அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா 4 பேரும் ஜெர்மனி மற்றும் இத்தாலி முதலான நாடுகளில் தலா இரண்டு பேரும் மரணித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம் : Sooriyanfmnews.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435